Friday, November 20, 2009

இளவேனில்

எழிலான காலை
இதமான வேளை
மணமான சோலை
மயக்கத்தின் வேளை
தென்றல்வந்து பாடும்
தேன்குரலும் கேட்கும்
வண்டுஇசை பாடும்
வண்ணமலர் பாரும்
பனிசுமந்த புற்கள்
பகலவனை பார்க்கும்
கனிசுவைக்க வென்று
பறவையினம் கூடும்
மலையில் இருந்து பாயும்
அருவிகதை கூறும்
கலகலக்கும் நீரில்
மீனெழுந்து வீழும்
இயற்கைஅன்னைதந்த
எழில்நிறைந்தசெல்வம்
இவை இன்ப
வெள்ளத்தின் சின்னம்

1 comment:

  1. கலகலக்கும் நீரில்
    மீனெழுந்து வீழும்
    இயற்கைஅன்னைதந்த
    எழில்நிறைந்தசெல்வம்
    இவை இன்ப
    வெள்ளத்தின் சின்னம்///

    வர்ணனை சூப்பருங்கோ!!!

    ReplyDelete