Tuesday, November 24, 2009

முயற்சி


இயலாமை என்ற ஒன்று
எம்வாழ்வில் ஓங்கியுண்டு
இவற்றிற்கு மருந்தாகும்
முயற்சி என்னும் மூலிகைதான்
பலபேரின் வெற்றிக்கு
அடிப்படையே முயற்சி தான்
உலகெங்கும் ஓங்கி நிற்கும்
உயிர் மூச்சு முயற்சி தான்
இயலாமை என்ற சொல்லை
போர் செய்து வீழ்த்திடவே
முயற்சி என்னும் ஆயுதத்தை
எடுத்திடுவோம் நாமெல்லாம்

Friday, November 20, 2009

இளவேனில்

எழிலான காலை
இதமான வேளை
மணமான சோலை
மயக்கத்தின் வேளை
தென்றல்வந்து பாடும்
தேன்குரலும் கேட்கும்
வண்டுஇசை பாடும்
வண்ணமலர் பாரும்
பனிசுமந்த புற்கள்
பகலவனை பார்க்கும்
கனிசுவைக்க வென்று
பறவையினம் கூடும்
மலையில் இருந்து பாயும்
அருவிகதை கூறும்
கலகலக்கும் நீரில்
மீனெழுந்து வீழும்
இயற்கைஅன்னைதந்த
எழில்நிறைந்தசெல்வம்
இவை இன்ப
வெள்ளத்தின் சின்னம்

Tuesday, November 17, 2009

அன்னை





பத்து மாதம் சுமந்து என்னை
பெற்றெடுத்த அன்னை
முத்தமிட்டு கன்னமதை
ஈரமாக்கும் அன்னை
பாரினிலே உயர்வதற்கு
பாசம் கொடுத்த அன்னை
முக்கனிகள் போல எம்மை
வளர்த்து விட்ட அன்னை
கல்வியிலே அறிவூட்டி
பாவலராய் மாற்ற
பாடுபட்டு பாரினிலே
உழைத்த எங்கள் அன்னை


ஆசையோடு அறிவு சேரும்
அவலமான பூமியில்
ஆதரவு தரவெனவே
வந்து விட்டாள் அன்னை

போர்


போர் என்ற அரக்கன்
புயல் போல வந்தான்
நேரின்றி மாறாக
உயிர் காவு கொண்டான்
பாரெங்கும் குருதியாய்
பரவிட்டு போனான்
பாதளச் சிறையிலே
விழுத்திட்டு போனான்
மானிடர் வாழ்வே
மயக்கமாய் ஆச்சு
யனனிக்க உயிர்கள்
பயப்பிடல் ஆச்சு
பாதையில் குருதி
பரவியே போச்சு
மரணமாம் வாழ்க்கை
போர் சொல்லலாச்சு
இறைவனின் கொடை
பொழியுமா எம்மில்
கருணை நீ காட்டாயோ
உலகமாம் தன்னில்