
போர் என்ற அரக்கன்
புயல் போல வந்தான்
நேரின்றி மாறாக
உயிர் காவு கொண்டான்
பாரெங்கும் குருதியாய்
பரவிட்டு போனான்
பாதளச் சிறையிலே
விழுத்திட்டு போனான்
மானிடர் வாழ்வே
மயக்கமாய் ஆச்சு
யனனிக்க உயிர்கள்
பயப்பிடல் ஆச்சு
பாதையில் குருதி
பரவியே போச்சு
மரணமாம் வாழ்க்கை
போர் சொல்லலாச்சு
இறைவனின் கொடை
பொழியுமா எம்மில்
கருணை நீ காட்டாயோ
உலகமாம் தன்னில்
நன்றாக உள்ளது தொடர்ந்து எழுதவும்
ReplyDeleteரொம்ப நன்றாக எழுதுகிறாய். சிறு சிறு எழுத்து பிழைகள் உள்ளன. பிரசுரிக்கும் முன் சரி பார்த்து பிரசுரிக்கவும். இளம் வயதில் இந்த அளவு எழுதுவது ஆச்சரியம் ஆக உள்ளது. கவிதைகள் மட்டும் இன்றி கட்டுரைகளும் எழுத முயலவும்.
ReplyDelete"எழுது. அதுவே அதன் ரகசியம்"