Tuesday, November 17, 2009

போர்


போர் என்ற அரக்கன்
புயல் போல வந்தான்
நேரின்றி மாறாக
உயிர் காவு கொண்டான்
பாரெங்கும் குருதியாய்
பரவிட்டு போனான்
பாதளச் சிறையிலே
விழுத்திட்டு போனான்
மானிடர் வாழ்வே
மயக்கமாய் ஆச்சு
யனனிக்க உயிர்கள்
பயப்பிடல் ஆச்சு
பாதையில் குருதி
பரவியே போச்சு
மரணமாம் வாழ்க்கை
போர் சொல்லலாச்சு
இறைவனின் கொடை
பொழியுமா எம்மில்
கருணை நீ காட்டாயோ
உலகமாம் தன்னில்

2 comments:

  1. நன்றாக உள்ளது தொடர்ந்து எழுதவும்

    ReplyDelete
  2. ரொம்ப நன்றாக எழுதுகிறாய். சிறு சிறு எழுத்து பிழைகள் உள்ளன. பிரசுரிக்கும் முன் சரி பார்த்து பிரசுரிக்கவும். இளம் வயதில் இந்த அளவு எழுதுவது ஆச்சரியம் ஆக உள்ளது. கவிதைகள் மட்டும் இன்றி கட்டுரைகளும் எழுத முயலவும்.

    "எழுது. அதுவே அதன் ரகசியம்"

    ReplyDelete